விஜய் உடன் சேர்ந்து களமிறங்கும் நெஞ்சில் துணிவிருந்தால்
மெர்சல் படத்துடன் வருகிறோம் என இயக்குநர் சுசீந்திரன் நெஞ்சில் துணிவிருந்தால் படம் வெளியீடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதே நேரத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படமும் வெளியாக உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது:-
எங்களுடைய திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என கேட்கிறார்கள். இல்லை நாங்கள் மெர்சல் உடன் வருகிறோம். 2013ஆம் ஆண்டு பாண்டியநாடு திரைப்படத்தை அஜித் படத்துடன் வெளியிட்டோம். ஆரம்பம் படமும் வெற்றிப்பெற்றது. எங்கள் படமும் வெற்றிப்பெற்றது என்றார்.