திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (14:01 IST)

பிரபல இந்தி இயக்குனருடன் இணையும் சூர்யா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் பாலிவுட் முன்னணி இயக்குனருடன் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பட எதற்கும் துணிந்தவன். இப்படத்தை அடுத்து,  சூர்யா பாலா இயக்கத்தில் ‘’வணங்கான்’’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 பல வருடங்களுக்குப் பிறகு பாலா, சூர்யாவுடன் இணைந்துள்ள இப்படத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2 வது கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், 2 வது கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்திற்கு இடையே, சிறுத்தை சிவாவின் அதிரடி ஆக்சன் படத்தின் வேலைகளை சூர்யா ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யாவின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது, அதில், பிரபல ஃப்ரூக் கபிர் இயக்கவுள்ள ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படம் பற்றி சூர்யாவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படம் வெளியாகத் தாமதம் ஆகும் என்பதால் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிஸியாகியுள்ளார்.