மீண்டும் வாரணம் ஆயிரம் மேஜிக்: சூர்யாவின் அடுத்த பட அப்டேட் இதோ..

Last Updated: வெள்ளி, 15 மார்ச் 2019 (17:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக உள்ள சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே மற்றும் கே.வி.ஆனந்த் இயகக்த்தில் காப்பான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில், சூர்யாவின் அடுத்த பட அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. என அழைக்கப்படும் இப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்குகிறார். 
 
இந்த படத்தை சூரியாவின் 2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. மேலும், பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.
 
தற்போதைய அப்டேட் என்னவெனில் இந்த படத்தில் சூர்யா உயர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம். ஏற்கனவே வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ராணுவ அதிகாரியாக நடித்திருப்பபார். 
 
மேலும், பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுதான் இந்த திரைப்படமாக உருவாகிறது என கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :