1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (14:32 IST)

பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் படம் – தமிழக அரசுடன் கைகோர்த்த சூர்யா

பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கினைக் குறித்து விளக்கும் குறும்படம் ஒன்றை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

தமிழக அரசு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது. இதற்குப் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. மக்களும் வியாபாரிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் பொருட்களின் மாற்றுப் பொருட்களை நாடிச்செல்ல ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கு குறித்து குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் விளக்க தமிழக அரசும் சூர்யாவின் 2D எண்டர்டெய்ன்மெண்ட்டோடு இணைந்து குறும்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. மாறலாம் மாற்றலாம்’ என்ற நான்கு நிமிட குறும்படத்தில் சூர்யாவே நடித்துள்ளார்.

இந்த குறும்படத்தில் சூர்யா பள்ளிக் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக்கின் தீமையை விளக்கும் காட்சிகளோடு சில அனிமேஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த குறும்படத்தை இயக்குனர் எல்.ஹெச். ஹரிஷ் ராம் இயக்கியுள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஓஷோ வெங்கt இசையமைத்துள்ளார்.

மாறலாம் மாற்றலாம் குறும்படத்தின் லிங்க்
https://www.youtube.com/watch?v=hgbKp8RkGUc