1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (14:13 IST)

சூர்யாவின் ''ஜெய்பீம்'' பட டீசர் ரிலீஸ் !!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் ரீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ஜெய்பீம்என்ற படத்தை இயக்கிவருபவர் தா.செ.ஞானவேல். இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸானது. இதில் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். இந்த இந்த சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்.  விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஜெய்பீம் ப்டம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது சூர்யாவின் ஜெய்பீம் பட டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.