புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:15 IST)

வாடிவாசலுக்கு முன் சூர்யா சிறுத்தை சிவா சர்ப்ரைஸ் கூட்டணி!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பதற்கு நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்காக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் உருவாவதாக சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் பல காரணங்களால் தள்ளிக்கொண்டே சென்றது. இடையில் சிவா அஜித் மற்றும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை இயக்கி கமர்ஷியல் இயக்குனராக பல மடங்கு உயர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாவதற்கான சூழல்கள் அமைந்துள்ளன. சூர்யா பாண்டிராஜ் படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்துக்கு முன்னதாக அந்த படத்தை சிவா இயக்கத்தில் குறுகிய காலத்தில் அந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.