வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:10 IST)

சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி திரையுலக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷங்கர் தனது மகளை அறிமுகப் படுத்துவதற்காக நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் பணியாற்றும் கார்த்தி, இயக்குனர் முத்தையா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன் மகள் மீது ரசிகர்கள் அன்பைப் பொழிவார்கள் என்று நம்புவதாகவும், அதறகாக அவர் எல்லா விதத்திலும் தயாராகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.