வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (21:09 IST)

சூர்யா பிறந்த நாளில் மீண்டும் ஒரு அப்டேட்?

சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளின்போது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்திற்காக அவர் ஜல்லிக்கட்டு பயிற்சி எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை டைட்டிலுக்கு வெளிவர இருக்கும் நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார் என்பதும், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் வாடிவாசல் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது