1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 12 ஜூன் 2018 (18:56 IST)

எங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது - சூர்யா நெகிழ்ச்சி

‘எங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது’ என மனம் நெகிழ்ந்துள்ளார் சூர்யா.
 
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சயீஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
 
இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, “கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. 
 
சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு” என்று மனம் நெகிழ்ந்தார்.