1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜூன் 2018 (18:47 IST)

ரஜினி- கார்த்திக் சுப்புராஜ் படம் ; 40 நாள் ஷூட்டிங் : புதிய தகவல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

 
ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படம் இன்று திரையரங்குகள் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் கடந்த 4ம் தேதி துவங்கியுள்ளது. இந்த படப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினி கடந்த 7ம் தேதி அங்கு சென்றார்.
 
இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. 
 
டேராடூன் மற்றும் டார்ஜலிங் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.