வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (13:35 IST)

சூர்யா கட் அவுட் அகற்றம் – ரசிகர்கள் வேதனை

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து நாளை திரைக்கு வர இருக்கும் படம் என்.ஜி.கே. இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் 215 அடி உயரமான ஒரு கட் அவுட்டை திருத்தணி அருகே திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலை பகுதியில் அமைத்தார்கள். இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரமான கட் அவுட் வைத்ததில்லை. இந்த கட் அவுட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.

இந்நிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இந்த கட் அவுட்டை அகற்றுமாறு ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் கட் அவுட் அகற்றப்பட்டது. பல லட்சம் செலவு செய்து வைக்கப்பட்ட கட் அவுட் ஒரே நாளில் அகற்றப்பட்டது சூர்யா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.