1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 ஜூன் 2022 (20:35 IST)

சூப்பர் மேனுக்கு வில்லனாகும் சூர்யா பட நடிகர்!

ஜீவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு  வெளியான படம் உன்னாலே உன்னாலே. இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் வினய்.

இப்படத்தை அடுத்து, ஜெயம்கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல்,  அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்த்ல் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், புராண காதாப்பாத்திரமான அனுமனை சூப்பர் மேனாக கற்பனை செய்து, பான் இந்தியா படமாக ஒரு படம்  உருவாகி வருகிறது.

இதில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில்,  சூப்பர் மேனுக்கு வில்லனாக  நடிகர் வினய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதில், வினய் மைக்கெல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.