ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:39 IST)

2 நிமிடங்களுக்கும் மேல் உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ டிரைலர்: ரிலீஸ் எப்போது?

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலர் சென்சார் சான்றிதழ் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்கள் 15 விநாடிகள் உள்ள இந்த டிரைலர் இன்று சென்சார் செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் இது குறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.