புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (12:03 IST)

ஜெய்பீம் படத்திற்கு ஆஸ்கர் உறுதியா..? – உலக சினிமா பிரபலம் ட்வீட்!

பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளரிடம் ஜெய்பீம் படம் குறித்து பேசியுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது.

அதை தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வரும் ஜெய்பீம், சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் “ஆஸ்கர் விழாவில் நாளை எந்த பிரிவில் விருது பெறும் படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த பிரபல ரோட்டன் டொமாட்டோஸ் ரேட்டிங் தளத்தின் விருதுகள் எடிட்டரான ஜாக்குலின் “சிறந்த திரைப்படத்திற்காக ஜெய்பீம் படம் விருது பெறுவதை காண காத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் ஜெய்பீம்க்கு கிட்டத்தட்ட விருது உறுதியாகியுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.