1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (17:44 IST)

அன்புள்ள சூர்யா: ரசிகர்கள் டிவிட்டரில் பாச மழை!!

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் போஸ்ட் போட்டு வருகின்றனர். 
 
ஆன்லைனில் வெளியாகவிருந்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் நடிகர் சூர்யாவிடம் இனி இது போல் செய்யக்கூடாது என்று வார்னிங் கொடுத்தனராம். ஆனால், அதை ஏற்க மறுத்து சூர்யா அடம்பிடித்ததால் இனி 2டி தயாரிப்பில் எந்த படம் வந்தாலும் அதை திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது என அறிவித்து சூர்யாவின் மொத்த படத்திற்கும் ரெட் கார்ட் போட்டுள்ளனர். 
 
தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் #அன்புள்ளசூர்யா மற்றும் #SooraraiPottru என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதை இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்துள்ளனர்.