செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:25 IST)

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சால் அதிரடி ஆக்ஷன் எடுத்த தஞ்சை கலெக்டர்!

மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குறித்து சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டதாக நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக ஜோதிகாவை மட்டுமின்றி சிவகுமார் குடும்பத்தையே வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜோதிகா தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான விளக்கமும் வரவில்லை என்றாலும் ஜோதிகாவுக்கு நெருக்கமான பல திரையுலக பிரபலங்கள் ஜோதிகா எந்த உள்நோக்கத்தோடும் இதனை  பேசவில்லை என்றும் அவர் பேசியது சரிதான் என்றும் கூறி அவருக்கு ஆதரவாக வருகின்றனர்.

ஜோதிகாவின் சர்ச்சையான பேச்சை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர்  கோவிந்தராவ்  கடந்த புதன்கிழமை`தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகளுடன் விரைந்து சென்று அதிரடி ஆய்வு நடத்தினார். ஜோதிகா பேசியதை போன்று  மருத்துவமனையில் ஏதேனும் குறையிருந்தால் அதனை சரி செய்ய இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.