திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (19:17 IST)

'சூர்யா 38' யாருடைய வாழ்க்கை வரலாற்று படம் தெரியுமா?

நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.




அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்தார்.  அரசியல்வாதியாக சூர்யா நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது. தற்போது கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இதில் தேசிய பாதுகாப்பு படை காமெண்டோ வேடத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் மோகன்லால், ஆர்யா, சாய்ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். 
 
இந்த படத்தை தொடர்ந்து  இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கங்கனா இயக்கத்தில் சூர்யா தனது 38 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.  ஆஸ்கர் விருது வென்ற குனீத் மோங்கா இந்த படத்தை சூர்யா உடன் இணைந்து  தயாரிக்கிறார்.
'சூர்யா 38 'படம்  இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழில் அதிபர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.