பாக்ஸ் ஆபீஸில் தரைமட்டமான NGK! நஷ்டத்தில் இருந்து மீளமுடியாமல் திணறும் படக்குழு!
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்த கோடையில் வெளியான திரைப்படம் சூர்யாவின் என்.ஜி.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தியடைய செய்ததா என்றால் இல்லை. சினிமா விமர்சகர்களிடமிருந்தும் மோசமான விமர்சனத்தை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான திறமைவாய்ந்த நடிகர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்து வசூலில் பட்டைய கிளப்பிவிடும். அதனாலே செல்வராகவன் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற ஒரு வித அதீத நம்பிக்கையும் மக்கள் மனதில் வேரூன்ற செய்தார் செல்வராகவன்.
அதே எதிர்பார்ப்பில் ஆறு வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவை வைத்து முதல்முறையாக NGK என்ற அரசியல் படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் குழப்பமான கதை, மோசமான திரைக்கதை என என்.ஜி.கே படம் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது. இப்படம் செல்வராகவனுக்கும் சூர்யாவுக்கும் கசப்பான அனுபவமாக மாறியுள்ளது.
NGK படம் வசூலில் மோசமாக பின்தங்கியுள்ளதாம். போட்ட முதலீட்டையே எடுக்கமுடியாமல் படக்குழு திணறி வருகிறதாம். மேலும் தமன்னா நடிப்பில் வெளிவந்த தேவி 2 படம் சூர்யாவின் NGK படத்தை ஓவர் டேக் செய்துவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இருந்தும் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.