திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:18 IST)

சூர்யா சிறுத்தை சிவா படத்தின் ஷூட்டிங் எப்போது… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

சூர்யா இப்போது பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஆகும் நிலையில் இப்போது சிறுத்தை சிவா படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகையான மஹிரா ஷர்மா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 13 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு அதன் மூலமாக பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.