ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (09:51 IST)

கோபமான பத்திரிக்கையாளர்.. மன்னிப்புக் கேட்ட சூர்யா… என்ன நடந்தது கங்குவா நிகழ்ச்சியில்?

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நாளை ரிலீஸாகிறது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த படத்துக்காக சூர்யா இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் நடந்த ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு சூர்யா மிக தாமதமாக வந்தார். அதனால் பத்திரிக்கையாளர் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி இருந்தது. அதனால் கடுப்பான ஒரு பத்திரிக்கையாளர் சூர்யாவை வழிமறித்து “ஏன் இவ்வளவு தாமதம்? மணி இப்போது என்ன? நாங்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது?” அதிருப்தியை வெளிப்படுத்தினார். பின்னர் மேடையேறியதும் சூர்யா தாமதத்துக்காக மன்னிப்புக் கேட்டார்.