1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:38 IST)

காப்பான் வெற்றிப்படமா ? தோல்விப்படமா – குழப்பும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் !

சூர்யா நடித்து வெளியாகியுள்ள காப்பான் படம் பாக்ஸ் ஆபிஸில் சராசரியான வசூலை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் மக்களிடம் சரி்யான வரவேற்பை பெறாத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான காப்பான் திரைப்படம் கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக மோகன் லால், ஆர்யா, போமன் இரானி மற்றும் கதாநாயகியாக சாயிஷாஆகியோர் நடித்துள்ளனர். அயன், கோ, கவண் ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படம் வழக்கமான சூர்யா படங்களின் வசூலை விடக் கம்மியாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 23 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை. இதுவரை 3 நாளில் கிட்டத்தட்ட 15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த வார வசூலைப் பொறுத்தே காப்பான் வெற்றிப்படமா தோல்விப்படமா என்பதை சொல்ல முடியும் என சொல்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.