திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:05 IST)

படத்தைச் செதுக்கி அழகு பார்ப்பவர்: சிம்பு பட இயக்குனருக்கு சுரேஷ் காமாட்சி வாழ்த்து!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்பு நடித்துவரும் அடுத்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இசையமைபாளருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
சிம்பு நடித்துவரும் அடுத்த படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த டீசருக்கு தனது வாழ்த்துக்களை சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
படத்தைச் செதுக்கி அழகு பார்க்கும் இயக்குநர் கவுதம் மேனன், அவருக்கேற்ப உரு மாறும் அழகன் இளவல் சிலம்பரசன், இசையில் மயக்கும் அரசன் ஏ.ஆர்.ரஹ்மான்  பெருமைக்குரிய தயாரிப்பாளர் அண்ணன் ஐசரிகணேஷ் ஆகியோர் இணைந்த கூடு "வெந்து தணிந்தது காடு
 
அதன் முன்னோட்டம் இன்று வெளியாகி மனதை தவிக்க வைத்திருக்கிறது. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்