ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (08:22 IST)

விடாமுயற்சி ரிலீஸ் தீபாவளிக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் அப்டேட்!

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  மாறி மாறி நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.

அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கடைசி கட்ட ஷூட்டிங் சென்னையில் நடக்கும் என தெரிகிறது. இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்த தேதியில் விடாமுயற்சி ரிலீஸ் ஆகாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடாமுயற்சி படத்தையும் இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்கிறது. அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 31 ஆம் தேதி என்பதால் கண்டிப்பாக அதே நாளில் இன்னொரு பெரிய படத்தையும் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். அதனால் விடாமுயற்சி ரிலீஸ் டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.