இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? அவரும் சினிமாவுக்கு வருகிறாராம்!

Last Modified திங்கள், 17 மே 2021 (13:20 IST)

குணச்ச்த்திர நடிகை சுரேகா வாணியின் மகளும் சினிமாவில் நடிக்க உள்ளாராம்.

தமிழில் தெய்வ திருமகள் படத்தின் மூலமாக அறிமுகமானவர் சுரேகா வாணி. அதன் பின்னர் சைவம், உத்தம புத்திரன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் அம்மா, அக்கா போன்ற வேடங்களில் நடித்துள்ளார். அதுபோல தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் குடும்ப பாங்கான வேடங்கள் என்பதால், அப்படியே ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தார். ஆனால் இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அபிப்ராயத்தை மாற்ற வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது சமீபகாலமாக அவர் தன் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர ஆரம்பித்துள்ளார். தன்னைப் போலவே தன் மகளையும் சினிமா துறையில் ஈடுபடுத்தவே அவரை இப்போது ப்ரமோட் செய்து வருகிறாராம்.



இதில் மேலும் படிக்கவும் :