திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:12 IST)

சூரரைப் போற்று படம் OTT-ல் ரிலீஸ்… விஜய் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை !

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யாவின் மார்க்கெட்டுக்கு இந்த விலை மிகவும் கம்மி எனவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் ஒடிடியில் வெளியாவது யார் யாரிடம் பேசவேண்டும் எனப்து குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிஸ்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், இதுகுறித்து  சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்க  உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள் உட்பட அனைவருமும் பேசி அவர்களின் கருத்தை அறிந்து திரையுலகம் செழிக்கும் விதத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.