திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:26 IST)

மாஸ்டர் தயாரிப்பாளரை அசைத்துப் பார்த்த அமேசான் சொன்ன தொகை!

மாஸ்டர் படத்தை ஓடிடி யில் ரிலீஸ் செய்வதற்கு பெரும் தொகை ஒன்றை கொடுக்க அமேசான் நிறுவனம் முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் பல திரைப்படங்கள் ஒடிடி பக்கம் சென்று கொண்டிருந்தாலும் விஜய் தனது ’மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளார் எத்தனை கோடி கொடுத்தாலும் ஓடிடி பக்கம் செல்ல வேண்டாம் என்றும் இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் மாஸ்டர் தயாரிப்பாளரிடம் விஜய் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே தியேட்டர் எப்பொழுது திறக்கின்றதோ அப்போதுதான் மாஸ்டர் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எப்படியாவது மாஸ்டர் படத்தை கைப்பற்றிவிட வேண்டுமென்று அமேசான் நிறுவனம் 100 முதல் 120 கோடி வரை கொடுக்க முன்வருவதாக தெரிவித்துள்ளது. இந்த தொகையை கேட்டு மாஸ்டர் தயாரிப்பாளர்களுக்கு லேசான் ஆசை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தியேட்டர்கள் திறந்தாலும் முன்பு போல மக்கள் கூட்டம் வருமா என்ற சந்தேகத்தில் இருக்கும் நிலையில் கிடைத்த வரை லாபம் என்று ஓடிடியில் விற்பதே சிறந்த முடிவு என யோசித்து வருகின்றனராம். ஆனால் விஜய் இதற்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.