1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (22:27 IST)

பிரியா வாரியர் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை

நடிகை பிரியா வாரியர் மீது தொடரப்பட்ட வழக்குகளை தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.




அண்மையில் வெளியான 'ஒரு அடார் காதல்' மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உள்ள பிரியா வாரியர். தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். குறிப்பாக தமிழக இளைஞர்களின் மனதில் குடியேறினார்.
 
பிரியா வாரியர் பாடிய பாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்துவதாக கூறி ஹைதராபாத் மற்றும் மகாராஷ்டிராவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பிரியா வாரியர் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை அவசர வழக்காக இன்று விசாரித்தது உச்சநீதிமன்றம். விசாரணையின்போது, நடிகை பிரியா வாரியர் மீது தொடரப்பட்ட வழக்குகளை தடை செய்தது உச்சநீதிமன்றம்.