புற்று நோயால் பாதித்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்!

VM| Last Modified சனி, 16 மார்ச் 2019 (19:07 IST)
தமிழில் தளபதி விஜய் போல் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. பிரின்ஸ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேஷ்பாபுவிற்கு ஆந்திராவில் கோடிக்கணக்கான ரசிகர்கள்  உள்ளனர். 
மகேஷ் பாபு தனது ரசிகர்களுக்கு பல உதவிகளை தேடிச்சென்று செய்து வருபவர்.  புற்று நோயால் பாதித்த சிறுமி ஒருவர் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகை ஆவார். தான் ஒரு முறையாவது மகேஷ்பாபுவை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இந்த தகவல் மருத்துவமனை மூலம் மகேஷ்பாபுவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சிறுமியை பார்க்க நேரில் வருவதாக கூறிய மகேஷ் பாபு, அவ்வாறே மருத்துவமனைக்கு வந்து சிறுமியை சந்தித்தார். சிறுமியுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிய மகேஷ் பாபு விரைவில் நல்ல உடல் நலத்துடன் திரும்புவாய் என சிறுமிக்கு ஆறுதல் கூறினார். சிறுமிக்கு நல்ல சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்ட அவர் சிறுமியின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். சிறுமிக்கு உதவியும் செய்துள்ளார். 

இந்நிலையில் மகேஷ்பாபு புற்று நோயால் பாதித்த சிறுமியை நேரில் பார்த்துச் சென்ற புகைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :