திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (23:33 IST)

விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் !

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கான் விஸ்வநாத் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவிய கொரொனா தொற்றின் இரண்டாவது அலைப்பரவல் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் மக்கள் நாள்தோறும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கட்டுள்ள சதுரங்க விளையாட்டு வீர்ர்களுக்கு உதவும் வகையில் செக்மேட் கோவி என்ற நிகழ்வை தனியார் அமைப்பான செஸ்.காம் ஏற்பாடு செய்தது.

இதில் செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனத்துடன் அரைமணிநேரம்  விளையாடியவர் பாலிவுட் நடிகர் அமீர்கான். இவர்  இந்த விளையாட்டு முடிந்ததும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, விஸ்வநாத் ஆனந்தின் பயோபிக்கில் நடிக்க நான் ஆர்வமுடன் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.