மாநாடு ரிலிஸ் சிக்கல்… பின்னணியில் விஜய் தொலைக்காட்சி!
மாநாடு படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு விஜய் தொலைக்காட்சியும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
சிம்புவின் மாநாடு படம் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முந்தினம் திடீரென படம் ரிலீஸாகாது என சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதற்கு அவர் பைனான்சியருக்கு தரவேண்டிய பணத்தைக் கொடுக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சுரேஷ் காமாட்சிக்கு கடைசி நேரத்தில் ஏன் இந்த சிக்கல் ஏற்பட்டது என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. படத்தின் தொலைக்காட்சி உரிமையை இயக்குனர் வெங்கட் பிரபு மூலமாக வாங்க விஜய் தொலைக்காட்சி முயற்சி செய்துள்ளது. ஆனால் கடைசி கட்டத்தில் சொன்ன விலையில் பாதிக்குதான் தரமுடியும் என்று சொல்லி விலகிவிட்டதாம். இதனால் அந்த தொகையை வைத்து பைனான்சியரின் கடனை அடைக்கலாம் என நினைத்திருந்த தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல் ஏற்படவே அதனால்தான் ரிலிஸ் இல்லை என்று அறிவித்தாராம். இதையடுத்து சிம்புவின் தந்தை டி ராஜேந்தரே தொலைக்காட்சி உரிமையைப் பெற்றுக்கொண்டு அந்த தொகையைக் கொடுத்து விட்டாராம். அதன் பின்னர்தான் ரிலிஸ் சிக்கல் முடிந்ததாம்.