செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2020 (18:09 IST)

குடும்ப குத்துவிளக்கா இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியை இப்போ பாருங்க - ஷாக்கிங் போட்டோ!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆதாரமாகவும் வெளிவந்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பிரகதி தற்போது வெளிநாட்டில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கூலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரகதியை இந்த மாதிரி முதன்  முறையாக பார்த்த ரசிகர்கள் "நீங்களும் இப்படித்தனா..? என ஷாக்காகி விட்டனர். இருந்தாலும் அவர் தன்னை இடத்திற்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்வது பலருக்கும் பிடித்திருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.