வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2020 (13:26 IST)

வெறித்தனமான ஒர்க்அவுட்... வேற லெவல் சிக்ஸ் பேக் - பிக்பாஸ் ஆரவ்வின் வைரல் வீடியோ!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் உள்பட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இதையே பில்டப் செய்து கூறினார். ஆனால் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ் நடித்த முதல் படமே படு மொக்கையாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டு ஆண்டுகளாக ஆரவ் ஒருசில படங்களில் நடித்து வந்த போதிலும் அவர் நடித்த முதல் படமான 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற திரைப்படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி வெளிவந்தது. அந்த படம் வசூலில் பின்தங்கி சரியாக ஓடவில்லை. அஜித் நடித்த 'அமர்க்களம்' 'அட்டகாசம்' 'அசல்' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சரண் இயக்கியிருந்த இந்த படம் முழுநீள காமெடி படமாக இருந்தாலும் ரசிகர்களை கவரவில்லை.

இதற்கு முன்னர் ஆரவ் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜய் ஆண்டனியுடன் சைத்தான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நேரத்தை மிக்சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஆம் மிக குறைந்த நாட்களிலேயே தீவிர உடற்பயிற்சி வெறித்தனமாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்னர் ஜிம்மில் பைசெப்ஸ் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அந்த நாட்களை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகலைத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.