ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:23 IST)

சூப்பர்சிங்கர் புகழ் பிரகதியின் கவர்ச்சி பீச் புகைப்படம் வைரல்

கடந்த 2012ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவர் பாடகி பிரகதி குருபிரசாத். 22 வயதான இவர் சிங்கப்பூரில் பிறந்தாலும் தற்போது அமெரிக்காவில் கல்லூரி படிப்பை படித்து வருகிறார் என்பதும் அவ்வப்போது தமிழகத்திற்கு வந்து ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
பிரபல இயக்குனர் பாலாவின் பரதேசி என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடிய பிரகதி அதன் பின்னர் வணக்கம் சென்னை, ராட்சசன், கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். மேலும் மாடலிங்கிலும் அவர் ஈடுபட்டு வருவஹாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சமீபத்தில் பாடகி குருபிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். பீச் ஒன்றில் அவர் நடந்து போவது போன்ற உள்ள இந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது