செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (19:04 IST)

பச்சை குத்திய வாலிபருக்கு நல்ல மனைவி கிடைக்க சன்னிலியோன் வாழ்த்து!

தனது பெயரை பச்சை குத்திய வாலிபரிடம் உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் என நடிகை சன்னிலியோன் கூறியுள்ளார். 
 
நடிகை சன்னி லியோன் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது அவரை சந்திக்க இளைஞர் ஒருவர் வந்தார். அவரை சந்தித்தபோது தனது கையில் சன்னி லியோன் என்ற பெயரை பச்சை குத்தி இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்
 
 சன்னி லியோன் என்ற எனது பெயரை உங்கள் கையில் பச்சை குத்தியது மிகுந்த மகிழ்ச்சி. எனது நினைவாக எப்போதும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்க எனது வாழ்த்துக்கள் என்று காமெடியாக கூறியுள்ளார் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது