புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (08:20 IST)

வளர்த்துவிட்டவரிடமே வேலையைக் காட்டிய ஆதி – அதிரடி முடிவெடுத்த இயக்குனர்!

இயக்குனர் சுந்தர் சி தன் ஊர் காரர் என்பதால் ஹிப்ஹாப் ஆதிக்கு தன் படங்களில் அதிக வாய்ப்புகள் கொடுத்துவந்தார்.

சுந்தர் சி எப்போதும் ஒரு இசையமைப்பாளர் செட் ஆகிவிட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார். சிற்பி, யுவன் ஷங்கர் ராஜா, இமான் என அந்த வரிசையில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதியோடு பல படங்களில் பணிபுரிந்தார். அதோடு நிற்காமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார்.

இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது சுந்தர் சிக்கும் ஆதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அடுத்ததாக இயக்க இருக்கும் அரண்மனை 3 படத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியைத் தூக்கிவிட்டு சத்யாவை இசையமைப்பாளராக பணியமர்த்தினார். மேலும் தான் தயாரிக்க இருக்கும் மாயா பஜார் படத்திலும் ஹிப் ஹாப் ஆதிக்கு வேலை கொடுக்கவில்லையாம்.

இதற்கெல்லாம் காரணம் ஆதி நான் சிரித்தால் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து பட்ஜெட்டை எகிற வைத்ததுதானாம்.