மூன்று ஹீரோ, ஒரே ஒரு ஹீரோயினுடன் தொடங்கியது சுந்தர் சியின் அடுத்த படம்!

மூன்று ஹீரோ, ஒரே ஒரு ஹீரோயினுடன் தொடங்கியது சுந்தர் சியின் அடுத்த படம்!
siva| Last Modified திங்கள், 14 செப்டம்பர் 2020 (12:10 IST)
மூன்று ஹீரோ, ஒரே ஒரு ஹீரோயினுடன் தொடங்கியது சுந்தர் சியின் அடுத்த படம்!
கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’மாயாபஜார் 2016’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சியின் அவ்னி மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பது என்பதையும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெளியான செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் பிரசன்னா, ஷாம் மற்றும் அசோக் செல்வன் ஆகிய மூன்று ஹீரோக்களும் சுருதிகா என்ற ஒரே ஒரு ஹீரோயினும் நடிக்க உள்ளனர். மேலும் ஒரு முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்

சத்யா இசையமைக்கவுள்ள இந்த படத்தை சுந்தர் சியின் இணை இயக்குனர்களில் ஒருவரான பரணி என்பவர் இயக்க உள்ளார். மாயாஜால அம்சங்களுடன் திரில் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் கதை தமிழுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றப்பட்டு உள்ளது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :