வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (16:56 IST)

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த சுனைனா.. அவரே வெளியிட்ட தகவல்..!

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக நடிகை சுனைனா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதை  அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் நடித்த ’ராய’ன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தான் நடிகை சுனைனா இணைந்துள்ளதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சேகர் அப்துல்லா படத்தில் இணைந்துள்ளேன், அவர் வலுவான பெண்கள் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்த கூடியவர். இந்த படத்தில் இணைந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva