செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (17:39 IST)

’டாக்டர்’ பட வெற்றியால் ‘அரண்மனை 3’ படத்திற்கு சிக்கல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக்கிய ’டாக்டர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முதல் நாளில் சுமார் 8 கோடி அதற்கு அடுத்த நாள் 8 கோடி என இரண்டே நாட்களில் 16 கோடி வசூல் செய்த இந்த படம் தற்போது 30 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாளை முதல் ‘அரண்மனை 3’திரைப்படம் வெளியாக உள்ளது அடுத்து பல திரையரங்குகளில் இன்று டாக்டர் பட்டம் தூக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சியாக டாக்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் டாக்டர் திரைப்படத்தை எந்தத் திரையரங்கும் தூக்கவில்லை இதனால் ‘அரண்மனை 3’திரைப்படத்திற்கு திட்டமிட்டபடி திரையரங்குகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.