1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (16:49 IST)

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது
 
விஜய் சேதுபதியின் 64வது படத்தை தயாரிக்க இருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்றும் இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையமைக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த படத்தில் பணிபுரியும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த, விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ மற்றும் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 40’ உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் 64வது படத்தையும் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.