வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (11:05 IST)

பிரபல இயக்குனர் ஜனநாதன் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தனது அலுவலகத்தில் மயக்கமுற்றார் என்பதும் அதன் பின் சென்னை அப்போலோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் சற்று முன் அவர் காலமாகி விட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்
 
விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள எஸ்பி ஜனநாதன் ஏற்கனவே இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இயக்குனர் ஜனநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் சேதுபதி தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இறந்து விட்டதை அடுத்து கதறி அழுது வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன