வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (22:20 IST)

விஜய் பட பாடகருக்கு நடிகர் – சூர்யா பாராட்டு !

விஜய் பட பாடகருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் வெளியான வீடியோ பாடல் என்ஜாய் எஞ்சாமி
.
இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிபெண்டண்ட் கலைஞர்களுக்கான உருவாக்கியுள்ள மாஜா என்றா தளத்தில் உருவாகியுள்ளது.

இப்பாடலுக்கு கர்ணன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசையமைத்து தயாரித்துள்ளார்.

இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று  6  கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இப்பாடல் எனக்குப் பிடித்துள்ளது, தெருக்குரல் அறிவு மற்றும் தீ ஆகியோருக்கு என் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த அறிவு, நன்றி எனப் பதிவிட்டுள்ளார். சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் டுவீட் பதிவிற்கு லைக்குகள் குவித்து வருகின்றனர்.

சூரரைப் போற்று படத்தின் இடம்பெற்ற ஊர்க்குருவி பருந்தாகுது என்ற பாடலையும் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலையும் இயற்றி பாடியது தெருக்குரல் அறிவு ஆவார்.