1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:00 IST)

மாஸ்டர் படத்தின் ரிலீஸைப் பொறுத்துதான் சுல்தான் ரிலீஸ் ! தயாரிப்பாளர் முடிவு!

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இந்த படத்தை திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்வதில் படக்குழு உறுதியாக உள்ளது.

பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அந்த படத்தில் தியேட்டர்களில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துதான் தொடர்ந்து படங்களை திரையரங்குகளில் ரிலிஸ் செய்வதா அல்லது ஓடிடியிலேயே ரிலீஸ் செய்யலாமா என தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய உள்ளனராம். இதில் முக்கியமாக கார்த்தியில் சுல்தான் மற்றும் சந்தானத்தின் டிக்கிலோனா ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மாஸ்டர் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கின்றனர்.