வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 3 அக்டோபர் 2020 (18:13 IST)

எந்த வேடத்துக்கும் பொருந்துவார்! நடிகர் சத்தியராஜுக்கு பிறந்த நாள்….குவியும் வாழ்த்து…

நடிகர் சத்யராஜுக்கு இன்று  தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரை நட்சத்திரங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய திரையுலகில் உள்ள மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சத்யராஜ்ஆனால் தன் திரையுலக வாழ்வில் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்து, வில்லனாக நடித்து, இன்று புகழேணியில் உள்ளார்.

ஆரம்ப காலத்தில் அவர் நூறவதுநாள்,  மிஸ்டர் பாரத்,விக்ரம்   போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பின் சிறந்த நடிகராக புகழ்பெற்றார்.

அதன்பின் அவர் வால்டர் வெற்றிவேல், இங்கிலீஸ்காரன், ஜீவா, நடிகன், அமைதிப்படை  போன்ற ஹிட் படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

விஜய் நடித்த நண்பன் படத்தில் அசத்தலான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.