வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (18:31 IST)

இயக்குநர் விஜய் மில்டனுடன் மீண்டும் இணைந்த நடிகை

விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா, மறுபடியும் அவர் படத்தில் நடிக்கிறார்.


 

 
விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் நடித்த படம் ‘கடுகு’. இந்தப் படத்தில் நடித்த சுபிக்‌ஷாவுக்கு சிறிய வேடம்தான் என்றாலும், மக்கள் மனதில் பதிகிற கேரக்டராக இருந்தது. எனவே, ‘கடுகு’ ரிலீஸுக்குப் பிறகு 4 படங்களில் கமிட்டாகியுள்ளார். அத்துடன், விஜய் மில்டன் தற்போது இயக்கிவரும் ‘கோலிசோடா 2’ படத்திலும் நடிக்கிறார்.
 
“விஜய் மில்டன் சார் என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது, கதை கூட கேட்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டேன். பின்னர் கதை தெரிந்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டேன். ‘கடுகு’ படத்தில் நடித்த பரத்துக்கு ஜோடியாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சுபிக்‌ஷா. பாலாஜி சக்திவேல் இயக்கிவரும் பெயரிடப்படாத படத்திலும் இவர்தான் ஹீரோயின்.