வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (11:42 IST)

பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்

தேசிய விருது பெற்ற இயக்குநரான பாலாஜி சக்திவேல், தன்னுடைய அடுத்த படத்தில் விஜய் மில்டனுடன் இணைகிறார்.


 

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘வழக்கு எண் 18/9’. இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தாலும், அடுத்த படமான ‘ரா ரா ராஜசேகர்’, இப்போதுதான் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது. எனவே, அடுத்த படத்துக்காக விஜய் மில்டனுடன் இணைந்துள்ளார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு மட்டுமின்றி, ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற இருக்கிறார் விஜய் மில்டன்.

இந்தப் படத்திலும், புதுமுகங்களையே அறிமுகப்படுத்த இருக்கிறார் பாலாஜி சக்திவேல். “நிறைய திறமை கொண்ட இளைஞர்கள் இங்கே கொட்டிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கான சரியான பாதையை அமைத்துத் தரவேண்டும் என்பதற்காகத்தான் புதுமுகங்களுடன் பணியாற்றுகிறேன். அதுமட்டுமல்ல, அவர்களுடன் பணியாற்றும்போதுதான் என்னாலும் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது” என்கிறார் பாலாஜி சக்திவேல்.