செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (10:27 IST)

ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்!

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் இப்போது ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அந்த படத்தைத் தயாரித்து அதில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்த படம் குறித்த அறிவிப்பு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.