1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (13:30 IST)

ஜெய்பீம் பட எதிரொலி: வீடு கொடுக்கும் லாரன்ஸ்!

ஜெய்பீம் பட எதிரொலி: வீடு கொடுக்கும் லாரன்ஸ்!
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் கதை உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த கதையில் பாதிக்கப்பட்ட ராசாக்கண்ணு என்பவர் உண்மையாகவே வாழ்ந்தவர் என்பதும் அவரது மனைவி பார்வதி அம்மாள் தற்போதும் உயிருடன் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் தற்போது இருக்கும் நிலையை அறிந்து வருத்தமுற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் அவரது ஏழ்மையை தனக்கு தெரியும் படி செய்த ஊடகவியலாளர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்து கொண்டார். மிக விரைவில் பார்வதி அம்மாளுக்கு வீடுகட்டி கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் 28 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நடிகர் சூர்யா, ஜோதிகா, ஞானவேல் ஆகியோர்களுக்கு தனது நன்றியும் பாராட்டுக்களும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.