திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (19:13 IST)

விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

விஸ்வாசம் படத்தில் காலா படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த திலீப் சுப்பராயன் பணியாற்ற உள்ளார்.
 
அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகிவரும் படம் ‘விசுவாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.
 
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் முதல் முறையாக அஜித்துக்கு இசையமைக்கிறார்.
 
இப்படத்தில் காலா படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணிபுரிந்த திலீப் சுப்பராயன் புதிதாக தற்போது இணைந்துள்ளார். இவர் அஜித் படத்திற்கு முதல் முறையாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.