செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (07:38 IST)

தமிழ் சினிமாவின் மூத்த ஸ்டண்ட் இயக்குனர் ஜுடோ ரத்னம் மறைவு!

தமிழ் சினிமாவில் 1200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியவர் ஜூடோ ரதன்ம்.

இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் நிறைய ஸ்டண்ட் கலைஞர்கள் அவரிடம் இருந்து உருவானவர்கள்தான். அதே போல பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அது தவிர தலைநகரம் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

வயது மூப்புக் காரணமாக சொந்த ஊரான வேலூரில் ஓய்வில் இருந்த அவர் தற்போது மறைந்துள்ளார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் திரைத்துறையை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.