செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:23 IST)

பரபரப்பாக ஆரம்பித்த சன்னி லியோனின் வீரமாதேவி – இப்ப நிலைமை என்ன?

சன்னி லியோன் நடிப்பில் உருவான வீரமாதேவி படம் தற்போது கிணற்றில் போட்ட கல் போல கிடக்கிறது.

கனடாவைச் சேர்ந்த இந்தோ அமெரிக்க நடிகை சன்னி லியோனி. இவர் ஆரம்பக்காலங்களில் ஆபாசப்படங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். திடீரென அவர் ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பாலிவுட்டில் அவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவரைக் கதாநாயகியாக வைத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வீராமதேவி எனும் படம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தமிழ் இயக்குனர் வி சி வடிவுடையான் இயக்கி வந்தார். வீராமாதேவி படத்தில் முதலாம் ராஜெந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவியாக நடிப்பதற்கு பலத்த எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனால்  அவர் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என நீதிமன்றம் கூறியது.

இப்படி பரபரப்பை கிளப்பி தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்து பின்னர் நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலே என சொல்லப்படுகிறது. இப்போது இருக்கும் நிலையில் அந்த தயாரிப்பாளர் சிக்கலை தீர்த்துவிட்டு மீண்டும் படத்தை எடுப்பாரா என்பதே தெரியாத நிலையில்தான் உள்ளாராம்.